இது நடக்க வேண்டும்!! ஓய்வறையில் கோஹ்லி போட்ட மாஸ்டர் ப்ளான் - கசிந்த ரகசியம்

ashwin
By Fathima Aug 20, 2021 06:10 PM GMT
Report

லாட்ர்ஸ் டெஸ்ட் போட்டியின் போது ஓய்வறையில் கோஹ்லி சொன்ன விடயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் அஸ்வின்.

இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா, இந்த போட்டியில் பும்ரா - ஷமி ஆகியோர் இங்கிலாந்து அணியை மிரட்டினர்.

இந்நிலையில் அவர்கள் ஓய்வறைக்கு திரும்பும் முன்பு, அணி வீரர்களுக்கு விராட் கோலி கூறிய திட்டத்தை அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

அதாவது, கோஹ்லி தங்களிடம் வந்து பும்ரா- ஷமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த சத்தம் பல ஆண்டுகளுக்கு மைதானத்தில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்தாக கூறியுள்ளார்.

இதன்படி, வீரர்கள் பெரும் விசில் சத்தம், கைத்தட்டல்களுடன் அவர்களை வரவேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.