ஆக்ரோஷமான பும்ரா.. ஆண்டர்சன் சொன்ன அந்த வார்த்தை என்ன தெரியுமா?

bumrah
By Fathima Aug 20, 2021 05:29 PM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

கடைசி நாள் வரை இங்கிலாந்தே ஜெயிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது எனலாம்.

இந்த போட்டியில் இங்கிலாந்து பும்ராவை கார்னர் செய்ததுடன், பவுன்சர்களாக வீசினர்.

இதற்கு காரணம் இங்கிலாந்து பேட்டிங்கின் போது, ஜேம்ஸ் ஆண்டர்சனை குறிவைத்த பும்ரா பவுன்ஸ் பந்துகளாக வீசினார்.

இதனால், கடுப்பான ஆண்டர்சன், களத்திலேயே பும்ராவிடம் வார்த்தைகளால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதன்போது என்ன நடந்தது என்பதை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய யூடியூப் வீடியோவில், முதல் இன்னிங்சில ஆண்டர்சனுக்கு பும்ரா வீசிக் கொண்டிருந்த போது ஆண்டர்சன் பும்ராவிடம், "நீ ஏன் இவ்வளவு வேகமாக எனக்கு பந்துவீசுகிறாய்? நான் இப்படித் தான் வேகமாக வீசினேனா?

இத்தனை நேரம், நீங்கள் 136 கி.மீ வேகத்தில் பந்துவீசிக் கொண்டிருந்தாய். திடீரென்று என்னைப் பார்த்ததும், ஏன் 145 கி.மீ இல் பந்துவீசுகிறாய்?" என்று ஆண்டர்சன் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆண்டர்சன் இப்படி கேட்பார் என தான் நினைத்துக்கூடபார்க்கவில்லை என்றும், இதை தனிப்பட்ட விதத்தில் இங்கிலாந்து எடுத்துக் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.