எது நம்ம Sweater ... அடேய் கேமரா மேன் : வைரலாகும் அஸ்வினின் வீடியோ

Ravichandran Ashwin Viral Video
By Irumporai Nov 08, 2022 07:17 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாவே இந்திய அணி மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் 

இந்த நிலையில் டாஸ் நிகழ்வின்போது இந்திய அணியின் பிரபல பந்து வீச்சாளர் அஸ்வின் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் டாஸ் வென்ற நிகழ்ச்சியின் போது கேப்டன் ரோஹித் சர்மாவை ரவி சாஸ்திரி பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் பயிற்சியில் இருந்த அஸ்வின் இரண்டு டி ஷர்டுகளை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார், இதனை கவனித்த கேமரா மேன் அஸ்வின் பக்கமும் கேமராவை திருப்பினார்.

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலான நிலையில், தமிழக கிரிக்கெட் வீரரான அபினவ் முகுந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் இந்த வீடியோவுக்கு அஸ்வின் பதில் அளித்துள்ளார்.

அதில் அந்த டி ஷர்ட்டுகள் என்னுடையதா எனப் பார்த்தேன். மேலும் கடைசியாக நான் பயன்படுத்தும் வாசனை திரவியத்தின் வாசம் வருகிறதா என பார்த்தேன் அடேய் கேமரா மேன் என பதில் அளித்துள்ளார்.