ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறேன்: அஸ்வின் எடுத்த திடீர் முடிவு

ashwin ipl 2021
By Fathima Apr 26, 2021 03:45 AM GMT
Report

2021ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழன் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென விலகியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் தனது விலகல் முடிவு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அவரின் டுவிட்டர் பதிவில், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.

கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம்.


அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன் . நன்றி டெல்லி கேபிடல்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

ஏற்கனவே ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் நடராஜன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து சமீபத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.