எப்படி வீரர்களை இவ்வளவு அலட்சியமாக கையாள முடிகிறது? CSKவிடம் அஸ்வின் கேள்வி

Ravichandran Ashwin Chennai Super Kings IPL 2026
By Sivaraj Apr 19, 2026 11:07 AM GMT
Report

ஆயுஷ் மாத்ரே காயத்துடன் விளையாடியதை குறிப்பிட்டு முன்னாள் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆயுஷ் மாத்ரே

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆயுஷ் மாத்ரே 13 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். 

Ayush Mhatre

ஆனால், அவருக்கு பேட்டிங்கின்போது திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் ஓடுவதற்கு சிரமப்பட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார்.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அணி நிர்வாகத்தை சாடியுள்ளார்.

முழங்காலில் கட்டுடன்தான் வந்தார்

அவர் கூறுகையில், "ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே, முழங்காலில் கட்டுடன்தான் வந்தார். அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அவர் கடந்த போட்டிகளில் பீல்டிங் செய்யவே இல்லை.

வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் அதைத் தொடர்ந்து கண்காணித்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். அதுதான் Injury Management-யின் வேலை; களத்தில் அவர் நொண்டியபடி இருக்கிறார்.

உங்களுடைய Physiotherapists வந்து பரிசோதித்திருக்கிறார்கள். அதற்கு பிறகும் அவரை விளையாட வைத்து ரன் ஓட வைக்கிறீர்கள்.

இது பெரிய காயமாக மாறினால், அவராலும் அடுத்த 6 வாரங்களுக்கு விளையாட முடியாது. எப்படி வீரர்களை இவ்வளவு அலட்சியமாகக் கையாள முடிகிறது" என தெரிவித்தார். 

Ravichandran Ashwin