“தென்னாப்பிரிக்கா போட்டியின்போது அஷ்வின் திடீர் போராட்டம்; கோலி உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டதால் பரப்பரப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினால் சிறிய போராட்டம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இரு அணிகளும் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
முதல் இன்னிங்ஸில் 130 ரன்களில் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 174 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கிய போது திடீரென ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மைதானம் முழுவதும் பரபரப்பாக காரணம் மழையோ, வெளிச்சமின்மையோ அல்ல, சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தொடங்கி வைத்த போராட்டம் தான்.
இந்த போராட்டத்தில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.
முதல் ஓவரை வீசச்சென்ற பும்ராவை தடுத்து நிறுத்திய அஸ்வின், நேராக நடுவரிடம் சென்று இந்த பந்து எங்களுக்கு வேண்டாம், வேறு ஒன்றை கொடுங்கள் எனக்கேட்டுள்ளார்.
இதனை ஏற்க முதலில் நடுவர் மறுத்துள்ளார்.
ஒவ்வொரு இன்னிங்ஸ் தொடங்கும் போது, பவுலிங் செய்யும் அணிக்கு புதிய பந்து வழங்கப்படும். பெட்டியில் இருந்து எந்த பந்து வேண்டுமோ அதனை அவர்களே தேர்வு செய்துக்கொள்ளலாம் என்ற சலுகை உள்ளது.
ஆனால் நேற்று இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை. இதனை கோலி உள்ளிட்ட மற்ற வீரர்கள் கவனிக்க தவறியபோதும், அஸ்வின் சரியாக கண்டறிந்தார்.
பின்னர் இதனை அனைத்து வீரர்களிடமும் கூற அனைவரும் நடுவரை சுற்றி வளைத்து புதிய பந்து வேண்டும் என கோரினர்.இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இறுதியில் 3வது நடுவர் பந்து பெட்டியை கொண்டு வந்து, இந்திய அணியிடம் கொடுத்தார். அதில் அஸ்வின் சிறந்த பந்தை தேர்வு செய்து அணியினரிடம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அஸ்வின் தேர்வு செய்த அந்த பந்தில் தான் 4ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்களை சாய்த்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி தற்போது வரை 94 எடுத்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கையில் உள்ள 6 விக்கெட்களை வைத்து இன்னும் 211 ரன்களை சேர்க்க வேண்டும்.