அஸ்வினை ஒதுக்கிய இந்திய அணி - சரிதான் என கூறிய முன்னாள் வீரர்! கடுப்பான ரசிகர்கள்

player ashwin comment ex player muhammed shami
By Anupriyamkumaresan Aug 28, 2021 10:57 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் இருந்து அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்தான தனது கருத்தை முகமது ஷமி ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில், மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் சொந்தப்பினாலும் ரவிச்சந்திர அஸ்வின் மட்டுமே ஓரளவிற்கு சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகள் எடுத்து கொடுத்தார்.

அஸ்வினை ஒதுக்கிய இந்திய அணி - சரிதான் என கூறிய முன்னாள் வீரர்!  கடுப்பான ரசிகர்கள் | Ashwin Not Interfere Ex Player Comment

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரவிச்சந்திர அஸ்வினுக்கோ இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜாவிற்கே இடம் கிடைத்து வருகிறது, அஸ்வினுக்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணி இந்த தொடரில் ஒரு வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும், ரவிச்சந்திர அஸ்வின் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவது தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அணியின் இந்த முடிவு முற்றிலும் தவறானது என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அஸ்வினை ஒதுக்கிய இந்திய அணி - சரிதான் என கூறிய முன்னாள் வீரர்!  கடுப்பான ரசிகர்கள் | Ashwin Not Interfere Ex Player Comment

அந்தவகையில், அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்தான தனது கருத்தை இந்திய அணியின் சீனியர் வீரரான முகமது ஷமி ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு முகமது ஷமி பதிலளிக்கையில், “அணி தேர்வு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அது அணி நிர்வாகத்தின் முடிவு. களத்தில் ஆடும் 11 வீரர்கள் தான் அணியின் வெற்றிக்காக அவர்களது கடமையை செய்ய வேண்டும்.

அஸ்வினை ஒதுக்கிய இந்திய அணி - சரிதான் என கூறிய முன்னாள் வீரர்!  கடுப்பான ரசிகர்கள் | Ashwin Not Interfere Ex Player Comment

அணி நிர்வாகம் தேர்வு செய்து களத்தில் இறக்கிவிட்ட 11 வீரர்கள் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே அணி தேர்வு குறித்தெல்லாம் ரொம்ப சிந்திக்கக்கூடாது” என்று முகமது ஷமி தெரிவித்தார்.