தென்னாபிரிக்கா வீரருக்கு எச்சரிக்கை விடுத்த அஸ்வின் - ஆட்டத்தில் பரபரப்பு - வைரல் வீடியோ..!
இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை பெற்றது.
இந்தியா தென்னாபிரிக்கா போட்டி
தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி 20 தொடர்களை முடித்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது.
இதில், 'பாக்சிங் டே' போட்டியாக முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 101 ரன்கள் எடுத்தார். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்'சில் தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டீன் எல்கர் 185 ரன்கள் குவித்தார்.
பின்னர், 163 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்னிலும், ரோகித் சர்மா ரன்கள் இன்றியும் க்ளீன் போல்டும் ஆகினர்.
எச்சரித்த அஸ்வின்
விராட் கோலி மட்டும் 76 ரன்களில் எடுத்து அவுட்டாக, கில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய கே.எல்.ராகுல், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்களில் நடையைக் கட்ட இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
முடிவில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தென்னாபிரிக்கா வீரர் ஜான்சனை எச்சரிக்கை செய்த சம்பவம் வெளியாகியிருக்கிறது. இன்னிங்ஸின் 98வது ஓவரில் அஸ்வின் 5வது பந்தில் ஜான்சன் தனது கிரீஸை விட்டு வெளியேறிய பிறகு தனது பந்துவீச்சை நிறுத்தினார்.
A warning by Ashwin as Jansen trying to back too much. pic.twitter.com/0u5uCeudkH
— Johns. (@CricCrazyJohns) December 28, 2023
அப்போது அஸ்வின் எதுவும் பேசாமல் சிறிய எச்சரிக்கை கொடுத்து மீண்டும் 5வது பந்தை வீசினார். அஸ்வின் Mankad செய்வதும் இது ஒன்றும் முதல் முறையல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.