புது சர்ச்சையில் சிக்கிய நடிகர் அஸ்வின் - மாசா...மாசம் கரெக்டா சிக்குறாரே...!
நடிகர் அஸ்வின் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர், ரசிகைகளைப் பெற்ற அஸ்வின் குமார் என்ன சொல்ல போகிறாய்? என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ், ஷிவாங்கி, தர்ஷா என பலரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.
இதனிடையே என்ன சொல்ல போகிறாய்? படத்தின் விழாவில் அவர் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதாவது பொதுவாக எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைக்கு மேல் கேட்டு தூங்கிவிட்டேன். நான் கேட்டு தூங்காத கதை இதுமட்டுமே என பேசினார். இந்த பேச்சு சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் கோபமடைய செய்த அந்த படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
இதற்கிடையில் அஸ்வின் தான் பேசியது தவறு என்பதுபோல் மக்களிடையே மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் அஸ்வின் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதில் பழிவாங்குவதற்கு எனக்கு மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது. எதுவாக இருந்தாலும் கர்மா பார்த்துக்கொள்ளும் என்பதைப்போல் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதனால் அவரை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.