‘இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்ல...’ - மீண்டும் சிக்கலில் சிக்கிய அஸ்வின் - வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

Ashwin Kumar Lakshmikanthan
By Nandhini May 22, 2022 07:29 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி - 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்தான் நடிகர் அஸ்வின். இவர் பல்வேறு ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். இதனையடுத்து, ஹரிஹரன் இயக்கத்தில்,‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் அஸ்வின் நடித்திருந்தார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது, பேசிய அஸ்வின், “நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்” என்று கூறியிருந்தார்.

அஸ்வினின் இந்தப் பேச்சு சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக மாறியது. மீம்ஸ், வீடியோ மூலமாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து அஸ்வினை பங்கமாய் கலாய்த்து தள்ளினர்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘செம்பி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் அஸ்வின் தன்னுடைய பெயரை ஏ.கே என குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த அஜீத் ரசிகர்கள், இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்ல... ஏ.கே என்றால் அது அஜீத் மட்டும் தான். அஸ்வின் பப்ளிசிட்டிக்காக இப்படி ஏ.கே என அஜீத்தின் பெயரை பயன்படுத்தியதாக பலர் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

‘இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்ல...’ - மீண்டும் சிக்கலில் சிக்கிய அஸ்வின் - வெளுத்து வாங்கும் ரசிகர்கள் | Ashwin Kumar Lakshmikanthan