அடுத்த போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்காது - முன்னாள் வீரர் வெளியிட்ட தகவல்
சென்னை அணியுடனான முதல் குவாலிபயர் போட்டியில் டெல்லி அணி வீரர் அஸ்வினுக்கு இடம் கிடைக்காது என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி இன்று (அக்டோபர் 10) நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இரு அணிகள் இடையேயான இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது. இதனிடையே இப்போட்டியில் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், தொடர்ந்து சொதப்பி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டெல்லி அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அஷ்வின் ஃபார்மின் மீது திருப்தியாக இல்லை. அஷ்வினுக்கு ஒரு ஓவர் கொடுத்ததன் மூலம், அவர் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது.அவருக்கு பதிலாக ஒரு வெளிநாட்டு வீரர் சேர்க்கப்படலாம். பவுலிங் ஆல்ரவுண்டராக ரிப்பல் படேல் ஆடுவார். ஸ்டோய்னிஸ் ஆட தயாராக இருந்தால் அவரை ஆடவைப்பார்கள் எனவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.