அஸ்வின் ஒரு சைன்டிஸ்ட்...புகழாரம் சூட்டிய சேவாக் - வைரலாகும் டுவிட்...!

Twitter Virender Sehwag
By Nandhini Dec 26, 2022 08:30 AM GMT
Report

அஸ்வின் ஒரு சைன்டிஸ்ட் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார்.

வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வந்தது. 3-ம் நாளான நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்தது.

100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி நேற்று களமிறங்கியது. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.

ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியால், உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி முன்னிலையில் இடம் பிடித்துள்ளது.

ashwin-is-a-scientist-virender-sehwag-twit

அஸ்வின் ஒரு சைன்டிஸ்ட்

இப்போட்டியில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணி களத்தில் இறங்கியபோது, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பானது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது, இறுதியில் அஸ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இந்த டெஸ்டில் ஆட்டநாயகன் விருது அஷ்வினுக்கு வழங்கப்பட்டது. அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மொத்தம் 54 ரன்களை எடுத்தார்.

இந்நிலையில் அஸ்வினை சைன்டிஸ்ட் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி இருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இந்த சைன்டிஸ்ட் இந்திய அணியை வெற்றி பெற வைத்து விட்டார். இந்த போட்டோ எனக்கு எப்படியோ கிடைத்தது. அஸ்வின் அற்புதமான இன்னிங்சை விளையாடியுள்ளார். ஷ்ரேயாஸ் உடனான அவரது பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது' என்று பதிவிட்டுள்ளார்.