“இது கொஞ்சம் கூட நல்லா இல்ல”... அம்பயர் -அஸ்வின் இடையே வாக்குவாதம் : என்ன நடந்தது களத்தில்?

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
இந்தியா- நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் போது நடுவருக்கும், இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்டில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதமடித்தார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்த நிலையில் இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டம் கட்டி விக்கெட் வேட்டை நடத்தினர்.
இறுதியாக அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்கிஸில் 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 5, அஸ்வின் 3, ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Ashwin argues with umpire Nitin Menon pic.twitter.com/R5qMxyeDi0
— Sunaina Gosh (@Sunainagosh7) November 27, 2021
இன்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியைவிட 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனிடையே முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி பேட் செய்தபோது, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் பல்வேறு உத்திகளை மேற்கொண்டு விக்கெட்டுகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதில் களத்தில் ஆடி கொண்டிருக்கும் பேட்ஸ்மேனை அம்பயருக்கு மறைக்கும் விதமாக diagonal run-up முறையில் அஸ்வின் பந்துவீசினார். பிட்சுக்கு நடுவே சென்று அவர் பந்துவீசிய போது அம்பயர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் ரஹானேவிடம் புகாரளித்தார்.
ஆனால் அஸ்வின் தொடர்ந்து அந்த முறையிலேயே பந்து வீசினார். அவர் ஓவர் முடித்துவிட்டு சென்றபோது, அம்பயர் நிதின் மேனன் அஸ்வினை அழைத்து அவரது பந்து வீச்சு குறித்து பொறுமையுடன் தெரிவித்தார். இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.