உங்க மேல கொஞ்சம் மரியாதை இருந்துச்சு : பாகிஸ்தான் அணிக்கு தரமான பதில் கொடுத்த அஸ்வின்

Ravichandran Ashwin Pakistan national cricket team
By Irumporai Oct 12, 2022 04:12 AM GMT
Report

இந்திய அணி குறித்து பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா கூறிய கருத்திற்கு அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான்

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது, உலகக்கோப்பை வரலாற்றில் கடந்தாண்டு வரை இந்திய அணியை ஒரு முறை கூட வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் இருந்து வந்தது.

12 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி மட்டுமே கண்டிருந்த இந்திய அணி கடந்தாண்டு முதல் முறையாக தோல்வி பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையிலும் தோல்வியை சந்தித்தது. 

உங்க மேல கொஞ்சம் மரியாதை இருந்துச்சு : பாகிஸ்தான் அணிக்கு தரமான பதில் கொடுத்த அஸ்வின் | Ashwin Gives A Perfect Reply Pakistan

இந்தியாவை கிண்டல் செய்த பாகிஸ்தான்

இந்த வெற்றிகள் தான் பாகிஸ்தானுக்கு கவுரவத்தை தேடி கொடுத்துள்ளது என அந்நாட்டு வாரிய தலைவர் ரமீஷ் ராஜா கூறியிருந்தார்.

இதுகுறித்து பேசிய அவர், இத்தனை ஆண்டுகள் இந்தியாவிடம் தோற்றதால் பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் மதிக்காமல் இருந்தனர். ஆனால் இந்தியாவை வீழ்த்தியதில் இருந்து பாபர் அசாமின் படைக்கு மதிப்பும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன என கூறினார்.

உங்க மேல கொஞ்சம் மரியாதை இருந்துச்சு : பாகிஸ்தான் அணிக்கு தரமான பதில் கொடுத்த அஸ்வின் | Ashwin Gives A Perfect Reply Pakistan

இந்நிலையில் இந்த கருத்துக்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் கொடுத்துள்ளார். அதில், கிரிக்கெட்டை ஒரு போட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். அதில் அரசியல் அழுத்தங்களை கொண்டு வந்து விளையாடக்கூடாது.

அஸ்வின்பதிலடி

இது முக்கியமான போட்டி தான். இரு நாட்டு மக்களும் கொண்டாடும் வெற்றி தான், ஆனால் இறுதியில் வெற்றி, தோல்வி அனைத்தும் சகஜமான ஒன்று என்பது தான் உண்மை. 

உங்க மேல கொஞ்சம் மரியாதை இருந்துச்சு : பாகிஸ்தான் அணிக்கு தரமான பதில் கொடுத்த அஸ்வின் | Ashwin Gives A Perfect Reply Pakistan

டி20 கிரிக்கெட்டில் அனைத்து போட்டிகளுமே மிகவும் சிறிய வித்தியாசத்தில் தான் வெற்றி, தோல்வி இருக்கும். கடைசி வரை போராடும் வீரர்களுக்கு தானாகவே மதிப்பு கிடைக்கும்.

அந்த வகையில் இத்தனை ஆண்டுகள் பாகிஸ்தான் அணி மீது நாங்கள் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தோம் என தரமான பதிலை கொடுத்துள்ளார்.