களத்தில் மோதிய அஸ்வின் - டீன் எல்கர் : கடைசியில் அஸ்வின் ஜெயித்த கதை
தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் செய்த விமர்சனத்திற்கு இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டால் பலத்த அடி கொடுத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. பெரும் எதிர்பார்புகளுடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 116 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியதால் ரசிகர்கள் பதறினர். அப்போது களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், முழு நேர பேட்ஸ்மேனே அடிக்க திணறிய பிட்ச்-ல் பவுண்டரி மழை பொழிந்தார். தென்னாப்பிரிக்காவின் முன்னணி பவுலர்களை அவர் பொழக்க இது டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என ரசிகர்கள் குழம்பினர். வெறும் 50 பந்துகளில் 46 பந்துகளை சந்தித்த அஸ்வின் 46 ரன்களை விளாசினார். அவரின் உதவியால் இந்திய அணி முதல் இன்னின்ங்ஸில் 202 ரன்கள் எடுத்தது.
இதனிடையே தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரின் நக்கலுக்கு அஸ்வின் பதிலடி கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னர் டின் எல்கர் கொடுத்த பேட்டியில், அஸ்வினின் பவுலிங் தென்னாப்பிரிக்காவில் எடுபடாது. இந்தியாவில் அவர் சிறப்பாக செயல்பட்டதை வைத்து, தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக பந்துவீசுவார் என்று கருதக் கூடாது. அஸ்வின் சிறந்த ஸ்பின்னர்தான். ஆனால் இங்கு அவரால் ஒன்னுமே செய்ய முடியாது எனக்கூறினார்.
பவுலிங்கில் தான் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறினாய், பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என காட்டுகிறேன் என்பது போல ஒவ்வொரு பந்தையும் சொல்லி சொல்லி அடித்துள்ளார். இப்படிபட்ட பேட்ஸ்மேனை தான் இந்திய அணி இவ்வளவு நாட்களாக பேட்டிங்கிற்கு உதவ மாட்டார் என ஒதுக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.