விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த அஸ்வின் - சர்ச்சையை கிளப்பிய ஒற்றைப் புகைப்படம்

virat kohli INDvsENG R Ashwin ENGvsIND
By Petchi Avudaiappan Aug 28, 2021 04:30 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திணறி வரும் நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 78 ரன்களும், இங்கிலாந்து 432 ரன்களும் எடுத்தன.

354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது.

முன்னதாக கடந்த 2 போட்டியில் ஆடும் லெவனில் அஸ்வின் தேர்வு செய்யப்படாத நிலையில், இப்போட்டியிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இது பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் அஸ்வின் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் இறங்கியுள்ளார்.

இம்முறை வலதுகை வீரரான அஸ்வின் பவுலிங் பயிற்சியில் ஈடுபடாமல் வித்தியாசமாக, இடதுகையில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப்பார்த்த பலரும் ஜடேஜா பவுலிங், பேட்டிங்கிற்கும் உதவுவார் என்றுக்கூறி தான் கோலி தேர்வு செய்தார். ஆனால் இந்த முறை பேட்டிங்கிலும் சொதப்பி இருக்கிறார், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாய். இங்கு நான் பேட் உடன் தயாராக நிற்கிறேன் பார் கேப்டன் விராட் கோலியை அவர் சீண்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.