ஐபிஎல் தொடரில் சாதிக்கப்போகும் இளம் வீரர் இவர் தான் : அஸ்வின் சொல்வது யாரை தெரியுமா?
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாதிக்கப்போகும் இளம் வீரர் குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதோடு வீரர்களுக்கான மெகா ஏலமும் நடக்கவுள்ளது. இதனால் இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 1,214 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த நிலையில் 590 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் இந்திய இளம் வீரர் ராஜ்வார்தன் ஹங்கர்கரை 2022 ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் போட்டிப் போடும் என இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.
அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தகூடியவர் என அஸ்வின் புகழ்ந்துள்ளார். ராஜ்வார்தன் ஹங்கர்கர் உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.