பிசிசிஐ செய்த செயலால் ‘கதறி அழுத அஸ்வின்’ - வெளியான உண்மை தகவல்

ravichandranashwin
By Petchi Avudaiappan Sep 23, 2021 12:17 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் எப்படி உணர்ந்தேன் என்பது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உருக்கமுடன் பேசியுள்ளார்.

கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் தமிழக வீரர் அஸ்வினுக்கு சில வருடங்களுக்குப் பின் டி20 அணியில் இடம் கிடைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு டி20 அணியில் இடம் கிடைத்தது.

இதையடுத்து, அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு அஷ்வின் தனது ட்விட்டரில் பழமொழி ஒன்றை பதிவிட்ட அஷ்வின் மகிழ்ச்சியும் நன்றியும் மட்டுமே இப்போது நான் சொல்ல வேண்டிய 2 வார்த்தைகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி -ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டிக்கு முன்பாக பேட்டியளித்த அவர், நான் பொதுவாக எப்போது அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டேன். அழ மாட்டேன். என் மனைவி மற்றும் சகோதரிகளிடம் நான், 'ஏன் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எமோஷனல் ஆகி அழுதுவிடுகிறீர்கள்?' என்று கேட்பேன். ஆனால், இப்போது தான் உண்மையில் அதன் காரணத்தை நான் உணர்ந்தேன். அணியில் நான் தேர்வு செய்யப்பட்ட செய்தி கேட்டவுடன் உடைந்து அழுதுவிட்டேன்.

ஆனந்த மிகுதியிலும் அழுகை வரும் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன். ஒரு கிரிக்கெட் வீரர் தனது கேரியரில் 70 சதவிகிதம் சிறப்பாக விளையாடியிருப்பார். 30 சதவிகிதம் சரியாக விளையாடாமல் போயிருப்பார். ஆனால், எனக்கு தெரிந்து அனைவருமே அந்த 30 சதவிகிதத்தை மட்டும் தான் பேசுவார்கள் தவிர, அந்த 70 சதவிகிதத்தை பற்றி யாருமே பேச மாட்டார்கள். எனக்கு தெரிந்து யாரும் எப்படி பேசியதும் இல்லை" என்று அஸ்வின் மறைமுகமாக தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.