Ashok Gehlot History in Tamil: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஈர்த்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த அசோக் கெலாட்!

Indian National Congress
By Vinothini May 17, 2023 03:06 PM GMT
Report

தற்போது உள்ள ராஜஸ்தானின் முதலமைச்சரான அசோக் கெலாட் என்னும் மூத்த தலைவரின் அரசியல் வாழ்கை மற்றும் தொண்டுகளை பார்க்கலாம்.

தனிப்பட்ட வாழ்கை

அசோக் கெலாட் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் 1951-ல் மே 3-ம் தேதி பிறந்தார். இவர் சிறுவயது முதலே மகாத்மா காந்தியினால் ஈர்க்கப்பட்டு காந்திய வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து வந்தார்.

ashok-gehlot-history-in-tamil

இவர் பி.எஸ்சி படிப்பை முடித்தார், மேலும் 1973-ல் எம்.ஏ, மற்றும் 1976-ல் ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் LLB படிப்பை முடித்தார்.

முன்னதாக, இவர் ஒரு டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார், தனது கனவை நிறைவேற்ற மிகவும் ஆர்வமாக இருந்தார், அதனால் அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் பின்னர் சில காரணங்களால் தொடர முடியாமல் விலகினார். இவர் பாபு லக்ஷ்மன் சிங் கெலாட் என்பவருக்கு மகனாக பிறந்தார், இவர் ஒரு பின்தங்கிய 'மாலி' (தோட்டக்காரர்) குடும்பத்தை சேர்ந்தவர்.

ashok-gehlot-history-in-tamil

அவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர், மேலும் இவர் 1977-ல் சுனிதா கெலாட் என்பவரை மணந்தார்.

இவர்களுக்கு வைபவ் கெலாட் எனும் மகன் மற்றும் சோனியா என்ற மகளும் உள்ளனர்.

சமூக தொண்டு

இவர் 1971 இல் வங்காளதேசத்தில், கிழக்கு வங்காள அகதிகள் நெருக்கடியில் இருந்து சுதந்திரம் அடைந்த நேரத்தில், இவர் அங்கு வந்து தொண்டு செய்தார்.

ashok-gehlot-history-in-tamil

கிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் பணியாற்றினார். அவருக்கு 20 வயதாக இருந்தபோது, ​​அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவருடைய நிறுவனத் திறமையைக் கவனித்தார்.

மேலும் தொண்டு செய்ததை கவனித்த அவர் அரசியலில் சேர அழைத்தார்.

அரசியல் வாழ்க்கை

அதன் பிறகு இவர், 1974-ல் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ( NSUI ) முதல் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1979-ல், ஜோத்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1980-ல், ஜோத்பூர் தொகுதியில் இருந்து 7வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் இவர் 8, 10, 11 மற்றும் 12வது மக்களவையில் அதே தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ashok-gehlot-history-in-tamil

1982ல் ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு, இந்திரா காந்தியின் அரசாங்கத்தில் சுற்றுலாத் துறையின் மத்திய துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1984-ல் மத்திய விளையாட்டுத் துறை துணை அமைச்சராகப் பணியாற்றினார். 1985-ல், முதல்முறையாக, ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . 10 மற்றும் 11வது மக்களவையில் ரயில்வேக்கான நிலைக்குழுவில் உறுப்பினரானார்.

மேலும், அவர் 1989-ல் உள்துறை அமைச்சராக இருந்தார். 1994 இல், அவர் மீண்டும் ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1997 இல், அவர் மூன்றாவது முறையாக ராஜஸ்தானின் காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஆனார்.

ashok-gehlot-history-in-tamil

1998-ல், அவர் ராஜஸ்தானின் ஜோத்பூரின் சர்தார்புரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் முறையாக ராஜஸ்தானின் முதலமைச்சரானார், இந்த பதவியை தற்போது வரை தக்க வைத்து கொண்டார்.

சர்ச்சைகள்

இவர் 2017 ஆம் ஆண்டில், இன்டர்நேஷனல் கன்சார்டியம் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசத்தின் ஆய்வில் "பாரடைஸ் பேப்பர்ஸ் " பட்டியலில் மற்ற அரசியல்வாதிகள் மத்தியில் அவரது பெயர் தோன்றியது.

ashok-gehlot-history-in-tamil

ஆனால், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால் இந்த வழக்கில் அவருக்கு க்ளீன் சிட் வழங்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டில், இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நிதி தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு ராஜஸ்தான் அரசு ₹11,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ஒப்பந்தங்களை வழங்கியதாகக் கூறப்பட்டபோது சர்ச்சையில் சிக்கினார்.

சமூக நலன்

இவர் ராஜஸ்தானின் முதலமைச்சராக இருந்தபோது, ​​அரசாங்கத்தின் சில கொள்கைகளான 7 மில்லியன் நாட்கள் வேலைவாய்ப்பு மற்றும் அவரது வறட்சி மேலாண்மை போன்றவை மிகவும் பாராட்டப்பட்டன.

ashok-gehlot-history-in-tamil

அவர் பாரத் சேவா சன்ஸ்தானின் நிறுவனராக இருந்தார், இது ராஜீவ் காந்தி நினைவு புத்தக வங்கி மூலம் புத்தகங்களை இலவசமாக வழங்குவது மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளையும் வழங்குகிறது.