விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மோதும் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா

Wimbledon tennis final Ashleigh Barty
By Petchi Avudaiappan Jul 09, 2021 02:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in டென்னிஸ்
Report

விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கான ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி-பிளிஸ்கோவா நாளை மோதுகின்றனர்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில்நேற்று நடந்த ஒரு அரைஇறுதி போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-3, 7-6 7-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தார்.

ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் விம்பிள்டனில் இறுதிசுற்றை எட்டுவது 1980-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 13-வது இடம் வகிக்கும் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீராங்கனை பெலாரஸின் சபலென்காவை போராடி விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

நாளை நடக்கும் விம்பிள்டன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி-பிளிஸ்கோவா மோத உள்ளனர்.