விம்பிள்டன் சாம்பியனுக்கே இந்த நிலைமையா? - ஒலிம்பிக்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Wimbledon tennis Ashleigh Barty Tokyo Olympics 2020
By Petchi Avudaiappan Jul 25, 2021 12:35 PM GMT
Report

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் ஒரு போட்டியில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.