சீதாராம் யெச்சூரியின் மகன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்!
சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
டெல்லி அருகே குருகிராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆஷிஷ் யெச்சூரி சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்த தகவலை சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஆஷிஷ் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.