60 வயதில் 2வது திருமணம் - புது மனைவியுடன் தீவிற்கு ஹனிமூன் சென்ற பிரபல நடிகர்!
கில்லி பட நடிகர் 2வது மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
2வது திருமணம்
ஆசிஷ் வித்யார்த்தி(61) ஒரு பான் இந்திய நடிகர். அதிகமாக தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர்.
11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சிறந்த நடிப்பிற்காக 1995-ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.
ஹனிமூன்
கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையிலும் காதலுக்கு வயதில்லை என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், 2வது மனைவியுடன் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இதுகுறித்து வெளியான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வெளிநாடுகளில் வைப்பிலிட்டு கோடிகளில் புரளும் டக்ளஸ்: அம்பலப்படுத்திய ஈபிடிபியின் முக்கிய புள்ளி IBC Tamil

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
