விஜய் அப்பவே அப்படி.. அரசியலில் சொல்லவா வேணும் - கில்லி அப்பா ஆஷிஷ் வித்யார்த்தி!
ஆஷிஷ் வித்யார்த்தி
தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்பட கடந்த 2004-ம் ஆண்டு வெளியானது. இந்த படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கில்லி படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்திருந்தார்.
அந்த படத்தில் இவரது நடிப்பு பலரையும் ரசிக்கவைத்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆஷிஷ் வித்யார்த்தி, இன்னமும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் தன்னை பார்த்தால் கில்லி அப்பா என்றே அழைப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "கில்லி படத்தில் இல்லை அதற்கு முன்னதாகவே அவருடன் பகவதி, தமிழன் உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்திருக்கிறேன்.
சந்தேகமே இல்லை
அப்போதிலிருந்தே வேலையில் ரொம்பவே சின்சியராக இருப்பார். ஷாட் வருவதற்கு முன்பு வரை அமைதியாக இருக்கும் நபர் ஷாட் ஆரம்பித்ததும் புயலாக மாறி எப்படித்தான் நடிக்கிறார் என நானே பலமுறை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளேன்.
சினிமாவிலேயே சிறப்பாக நடிக்கக் கூடிய விஜய் அரசியலுக்கு அடுத்ததாக வர முடிவெடுத்திருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அதற்கு எந்தளவுக்கு உழைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு தனது உழைப்பை நடிகர் விஜய் கொட்டுவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.