“மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்” - ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணியை வாழ்த்திய தேவர்கள்?

cricket ashes test match england vs australia lightning cracks
By Thahir Dec 18, 2021 06:01 AM GMT
Report

ஆஸ்திரேலியாவின் அடிலைட்டில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

நேற்று நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணிக்கு உதவ, வானில் உள்ள தேவர்களே உதவியது போன்ற நிகழ்வு ஏற்பட்டது.

ஆஸ்திரேலிய அணி தங்கள் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்து தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில், இயற்கை இங்கிலாந்து அணிக்கு உதவ முடிவு செய்தது.

போட்டி நடைபெறும் போது அப்பகுதியில் திடீரென பயங்கர ஒலியுடன் இடி மின்னல் ஏற்பட்டது.

இதனால், வீரர்களுக்கு இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டதோடு, அப்போது ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் பந்தை அடிக்காமல் விலகினார்.

இதைத் தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இடி விழுந்த காட்சி ஸ்டம்பில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி, அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஆஷஸ் போட்டியில் இடி விழுந்து, மின்னல் கேமராவில் பதிவான சம்பவம் இணைய வாசிகளிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல வித கருத்துகளும், மீம்களும் வந்த வண்ணம் உள்ளன.