ஆஸி. அணியில் களமிறங்கும் புது வீரர் - பாக்ஸிங் டே டெஸ்டுக்கான அணி அறிவிப்பு

AUSvENG ashestest
By Petchi Avudaiappan Dec 25, 2021 05:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது டெஸ்ட் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.  இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் பாக்சிங் டே போட்டி நாளை (26 ஆம் தேதி) தொடங்க உள்ளது.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மூன்றாவது போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் ஸ்காட் பலாண்ட் என்னும் அறிமுக வீரருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனில், டேவிட் வார்னர், மார்கஸ் ஹரீஸ், மார்னஸ் லபுசேன், ஸ்டீவ் ஸ்மித், டர்வீஸ் ஹெட், கேமிரான் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் மார்ஸ், நாதன் லயோன், ஸ்காட் ப்லாண்ட். ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.