‘’கொஞ்சம் நல்ல மாரி ரொம்ப வேற மாரி ‘’ - ஆ‌ஷஸ் முதல் டெஸ்ட் 147 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து

England ashesseries
By Irumporai Dec 08, 2021 07:45 AM GMT
Report

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். 5 போட்டி கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று உள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சினால் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்டார்க் விக்கெட்டை கைப்பற்றி சாதித்தார். ரோரி பர்ன்ஸ் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து டேவிட் மலான் 6 ரன்னிலும், கேப்டன் ஜோரூட் ரன் எதுவும் எடுக்காமலும் ஹசில் வுட் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள்.

11 ரன்னில் இங்கிலாந்து 3 விக்கெட்டை பறிகொடுத்தது. கேப்டன் கம்மின்ஸ் தனது அபாரமான பந்து வீச்சினால் பென் ஸ்டோக்ஸ் (5 ரன்), ஹசீப் ஹமீது (25ரன்) ஆகியோரை அவுட் செய்தார். 60 ரன்னில் 5 விக்கெட்டை அந்தஅணி இழந்தது.

6-வது விக்கெட்டான ஆலிவர் போப்-ஜோஸ் பட்லர் ஜோடி சிறிது தாக்குப்பிடித்து ஆடியது. இந்த ஜோடியை ஸ்டார்க் பிரித்தார். பட்லர் 39 ரன்னில் அவரது பந்தில் வெளியேறினார். ஆலிவர் போப் 35 ரன்னில் கிரீன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

8-வது விக்கெட்டாக ஆலிவர் ராபின்சன் ரன் எதுவும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். 122 ரன்னில் இங்கிலாந்துஅணி 8 விக்கெட் இழந்து பரிதாப நிலையில் இருந்தது. ஸ்கோர் 144 ஆக இருந்த போது 9-வது விக்கெட்டாக மார்க் வுட் அவுட் ஆனார்.

அவர் 8 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. கடைசி விக்கெட்டாக கிறிஸ் வோக்ஸ் 21 ரன்னில் வெளியேறினார். கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க், ஹசில் வுட் தலா 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.