‘‘இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல’’ - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
உடலில் சிறிய அறிகுறி மாறினால் கூட தயங்காமல் பரிசோதனை செய்து கொண்டால், 100% உயிரிழப்பு தவிர்க்கப்படும் எனசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா தடுப்பு பணியில் அதிக அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுமக்கள், இந்த அசாதாரணமான சூழலில் பணிபுரியும், மாநகராட்சி ஊழியர்களை கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல.
ஏதேனும் சிறிய மாற்றம் தெரிந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது 100% உயிரிழப்பு தவிர்க்கப்படும் என கூறினார்.
மேலும்அறிகுறிகள் தென்பட்டால்,அருகில் உள்ள காய்ச்சல் முகாமிற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என அவர் கூறினார்.