ஓரம் கட்டப்பட்ட விக்ரமன் - பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தையும் 50 லட்சத்தையும் வென்ற அசீம்
விக்ரமனை 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டு பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் அசீம்.
பிக்பாஸ் சீசன்6
விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6 இதில் 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
முதல் வாரம் முதல் கடைசி வாரம் வரை சண்டை, அன்பு, கண்ணீர், சமரசம், நட்பு, வாக்குவாதம் என சுவாரஸ்யமாக நடந்து வந்தது.
இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சுவராஸ்யத்தை ஏற்படுத்த பல டாஸ்குகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்படுத்தி மக்களை கவர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் 100 நாட்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் டைட்டடில் வின்னர் யார் என்பது நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்ற அசீம்
மக்களின் வாக்குகள் அடிப்படையில் இறுதி வரை 3 போட்டியாளர்கள் அசீம், விக்ரமன், சிவின் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து நேற்று நடந்த இறுதி எபிஷோட்டில் டைட்டில் வின்னர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். அதில் அசீம் டைட்டில் வின்னர் பட்டம் வழங்கப்பட்டது.
அவருக்கு ரூ.50 லட்சமும் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்திற்க விக்ரமனும், 3ம் இடத்திற்கு சிவின் ஆகியோர் இருந்தனர்.
விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி IBC Tamil