பாலியல் வழக்கு; சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாமியாருக்கு ஆயுள் தண்டனை
அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை சீடராக தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் பெண் சீடரை ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து இது தொடர்பான வழக்கு குஜராத்தில் உள்ள காந்தி நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் காந்திநகர் முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசாராம் பாபுவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் நிருப்பிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவர் இறந்த நிலையில் சாமியார் ஆசாராம் பாபு மனைவி உள்பட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.