ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அசானி புயல்’ - 1000 ஏக்கர் பயிர்கள் சேதம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

asani cyclone
By Nandhini May 12, 2022 11:10 AM GMT
Report

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ம் தேதி புயலாக உருவெடுத்தது. இதற்கு ‘அசானி’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தப் புயல் வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகா்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டது.

இதனால் ஆந்திர மாநில வட கடலோர மாவட்டங்களில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்ந்தது.

அசானி புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், பபாத்லா, ஓங்கோல் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

‘அசானி’ கரையைக் கடந்தாலும் ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 5060 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிதமானது முதல் பலத்த மழை பெய்யும். மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்’.

புயல் கரையை கடந்தாலும் ஆந்திர கடலோர பகுதியில் தொடர்ந்து மையம் கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரவலாக மழை பெய்யும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அசானி புயலால் ஆந்திர முழுவதும் பெய்த பலத்த மழையால் 1000 ஏக்கர் பயிர்கள் நாசமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அசானி புயல்’ - 1000 ஏக்கர் பயிர்கள் சேதம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Asani Storm