திசை மாறுகிறது அசானி புயல் ... தமிழகத்தில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அசானி புயலால் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியில் இருந்து 590 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள புயல் இன்று இரவு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையையொட்டி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கோடை வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.