திகிரியின் கடைசி ராணி ரசமஞ்சரி தேவி காலமானார்...!
திகிரியின் கடைசி ராணியான ரசமஞ்சரி தேவி உடல்நலக்குறைவால் காலமானார்.
ராணி ரசமஞ்சரி தேவி காலமானார்
இந்தியாவின் முன்னாள் சமஸ்தானமான திகிரியா தோட்டத்தின் கடைசி ராணியாகவும் இருந்தவர் மகாராணி ரசமஞ்சரி தேவி.
இவர் 1977ம் ஆண்டு அத்தகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஜனதா தளம் கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1980ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
ரசமஞ்சரி திக்ரியா தோட்டத்தின் கடைசி மன்னரான மறைந்த பிரஜராஜ் பைரபார் க்ஷத்திரிய சம்பதிசிங் மொஹபத்ராவை மணந்தார். 96 வயதான ரசமஞ்சரி தேவி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று தனது வீட்டில் காலமானார்.

இந்நிலையில், இவரது மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்று, அரச தகன மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையில், முன்னாள் எம்எல்ஏ ரஸ்மஞ்சரி தேவியின் மறைவுக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். லோபி ஜெயசங்கர் மிஸ்ரா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ சந்தோஷ் சிங் சலுஜா ஆகியோர் இரங்கல் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாநில கால்நடை வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரணேந்திர பிரதாப் ஸ்வைன் போன்ற உயரதிகாரிகள் உட்பட ஏராளமானோர் அவரது இல்லத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.