முஸ்லிம்கள் தான் அதிகமாக காண்டம் பயன்படுத்துகிறார்கள் - அசாதுதின் ஓவைசி பதிலடி!
முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், நாட்டில் மக்கள் தொகையில் ஏற்ற தாழ்வுகள் இருப்பதாகவும், எனவே அனைத்து சமுதாயத்தினருக்கும் பொருந்தும் வகையில் பொதுவான மக்கள் தொகை கொள்கை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு சமூக ரீதியாக மக்கள் தொகையில் ஏற்ற தாழ்வுகள் இருப்பது முக்கியமான பிரச்னை. அதனை புறக்கணிக்ககூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, குரானை படிக்க வருமாறு மோகன் பகவத்தை அழைப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
அசாதுதீன் ஒவைசி
``கருக்கலைப்பு செய்வது மிகப்பெரிய பாவம் என்று அல்லா எங்களுக்கு சொல்லி இருக்கிறார். முஸ்லிம்கள் இரண்டு குழந்தைக்கு இடையே இடைவெளி விட ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்கள் தான் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகின்றனர்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களிடம் குழந்தைகள் பிறப்பு விகிதம் 2 சதவீதம் குறைந்திருக்கிறது. நீங்கள் வரலாற்றை தவறாக சித்தரிக்க முயன்றால் அது உங்களது தவறு. 2020ம் ஆண்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்.
மக்கள் தொகை
அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நீங்கள் வேலை வாய்ப்பையோ அல்லது சம்பள உயர்வையோ கொடுக்கவில்லை.
நாட்டில் 50 சதவீத மக்கள் தங்களது சாப்பாடு மற்றும் மருந்துக்கு தங்களது பிள்ளைகளை நம்பி இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்போவதில்லை. ஆனால் முஸ்லிம்களை தாக்குகின்றனர்” என்று தெரிவித்தார்.