ஆர்யன் கானுக்கு நான் போதைப் பொருள் கொடுக்கவில்லை - நடிகை அனன்யா பாண்டே
ஆர்யன் கானுக்கு போதைப் பொருள் விநியோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு நடிகை அனன்யா பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார்.
மும்பை போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நேற்று அனன்யா பாண்டே ஆஜரானார்.
அப்போது, ஆர்யன் கானின் வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் மற்றும் போதைப் பொருள் விநியோகம் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்த அனன்யா, ஆர்யன் கானுக்கு போதைப் பொருள் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை அனன்யா பாண்டேவிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். மேலும், ஆர்யன் கானின் வாட்ஸ் அப்பில், சில பிரபலங்களின் பெயர்கள் இருந்ததாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தவும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.