போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான், 28 நாட்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலை

released aryankhan arthurjail
By Irumporai Oct 30, 2021 06:04 AM GMT
Report

போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான், 28 நாட்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலையாகியுள்ளார்.

மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்றகேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிஅமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 3-ம் தேதி அந்தக் கப்பலில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 20 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில்  கடந்த 3 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்ற நேற்று முந்தினம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ஆர்யன் கானுக்கு 14 நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

அதன்படி ஆர்யன் கான் மும்பையை விட்டு வெளியேற தடை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராக வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்ட நண்பர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது, செய்தியாளர்களை சந்திக்க கூடாது, தேவைப்படும் போதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டும், உள்ளிட்ட 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் ஆர்யன் கானின் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான், 28 நாட்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலையாகியுள்ளார்.