ஆர்யன் கான் பிறந்தநாள் - 500 மரக்கன்றுகளை நட்ட நடிகை ஜூகி சாவ்லா
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் பிறந்தநாளையொட்டி, ஆர்யன் கான் பெயரில் 500 மரக்கன்றுகளை நட்டுள்ளதாக நடிகை ஜூகி சாவ்லா தெரிவித்துள்ளார்.
ஷாருக்கானின் நெருங்கியத் தோழி நடிகை ஜூகி சாவ்லா. சமீபத்தில் போதைப்பொருள் சர்ச்சையில் ஒருமாதமாக சிறையில் இருந்த ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது.
அவரது ஜாமீனுக்காக விடுதலைப் பத்திரத்தில் 1 லட்ச ரூபாய் கட்டி கையெழுத்திட்டு வெளிக்கொண்டு வந்தார் நடிகை ஜூஹி சாவ்லா.
இத்தனை சர்ச்சைகளுக்கிடையே நாளை ஆர்யன் கான் தனது 24 ஆவது பிறந்தாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ஆர்யன்கான் பெயரில் 500 மரங்களை நட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜூகி சாவ்லா.
அந்தப்பதிவில், பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்யன். உங்கள் ஆசைகள் வரும் ஆண்டுகளில் நிறைவேறட்டும். நீங்கள் என்றென்று ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் பாதுகாக்கப்பட்டவராகவும் சர்வ வல்லமையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.
உங்கள் பெயரில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன” என்று உற்சாகத்துடன் தனது வாழ்த்துதலை தெரிவித்துள்ளார்.
Happy Birthday Aryan !
— Juhi Chawla (@iam_juhi) November 12, 2021
Our wishes in all these years remain the same for you, may you be eternally blessed , protected and guided by the Almighty. Love you .⭐️?????????500 trees pledged in your name .??? Jay, Juhi , Jahnavi , Arjun and all ours . pic.twitter.com/ogCMNKH29X