போதை மருந்து வழக்கு: ஷாருக்கான் மகனுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

bail aryankhan mumbaicourt
By Irumporai Oct 20, 2021 09:41 AM GMT
Report

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் உள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான உத்தரவு இன்று( 20) விசாரணைக்கு வந்தது.

மும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, போதைப் பொருள் தடுப்பு போலீசார், கடந்த 3ம் தேதி அந்த கப்பலில், சாதாரண பயணிகள் போல சென்று திடீர் சோதனை மேற்கொண்டார்கள்.

அப்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதுஇதனையடுத்து, இந்த வழக்கில் 18 பேரை போலீசார் கைது செய்தனர்,

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உட்பட 8 பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்கள்.  இந்த நிலையில் மும்பையில் ஆர்தர் ரோடு சிறையில் உள்ள சிறையில் உள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று( 20) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கினை நடிகர் சல்மான்கானை சிறையில் இருந்து வெளியில் எடுத்த மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆர்யனுக்காக வாதாடிய நிலையில் இன்று ஆர்யகானுக்கு மீண்டும் ஜாமின்  மறுக்கப்பட்டுள்ளது.