என் மகன் வரும் வரைக்கும் வீட்ல ஸ்வீட் கிடையாது': ஷாருக் மனைவி உத்தரவு

Aryan Khan Gauri Khan Not Cook Sweets
By Irumporai Oct 19, 2021 12:50 PM GMT
Report

சிறையில் இருக்கும் ஆர்யன் கான் வீட்டிற்கு திரும்பும் வரை வீட்டில் இனிப்பு வகைகளை சமைக்கக் கூடாது என்று ஷாருக்கான் மனைவி கவுரி கான் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த 2 ஆம் தேதி சொகுசு கப்பல் ஒன்று சென்றது. அதில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதியானதால்  விருந்தில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

என் மகன் வரும் வரைக்கும்  வீட்ல ஸ்வீட் கிடையாது

இந்த நிலையில் கைதானவர்களிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி முடித்த நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருக்கும் ஆர்யன் கான், சிறைச்சாலையில் செலவு செய்வதற்காக 4,500 ரூபாயை ஷாருக்கான் மணியார்டர் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஆர்யன் கான் சிறைக்கு சென்றதில் இருந்து அவர் தாய் கவுரி கான் கண்ணீர் விட்டபடி கவலையில் இருப்பதாகவும் மகனை ஜாமீன் எடுக்க கடும் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் மும்பை சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆர்யன் கான் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை வீட்டில் இனிப்பு பண்டங்களை சமைக்க வேண்டாம் என்று வீட்டின் கவுரி கான் சமையல்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.