கொரோனா மூன்றாம் அலை - மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த எச்சரிக்கை

Corona BJP Modi Arvind Kejriwal Third Wave
By mohanelango May 18, 2021 10:30 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது. இரண்டாம் அலையால் ஏற்பட்ட பாதிப்புகளும் மரணங்களும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

கொரோனா தினசரி பாதிப்புகள் குறைந்து வந்தாலும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறைவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதங்களில் இந்தியாவை தாக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்றாம் அலை குழந்தைகளைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை - மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த எச்சரிக்கை | Arvind Kejriwal Warns Central Govt Of Second Wave

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில் சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா வகை குழந்தைகளை அதிகம் தாக்குகிறது.

இதனால் இந்தியாவிலும் மூன்றாவது அலை தாக்கும் நிலை உள்ளது. எனவே சிங்கப்பூரிலிருந்து வரும் விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனையும் விரைவுபடுத்தி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.