டெல்லியில் படுதோல்வி..அடுத்து பஞ்சாப் முதல்வர் - அரவிந்த் கெஜ்ரிவாலின் பிளான் என்ன?
பஞ்சாப் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி
டெல்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் 70 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.இப்போது பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது.
இந்த சூழலில் பஞ்சாப் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆம் ஆத்மி கட்சிக்கு 90க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாலும், அவர்கள் யாரும் அதிகாரத்திலிருந்து வெளியேற விரும்ப மாட்டார்கள் என்பதாலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு கவிழாது.
![ரூ.56 கோடியில் 12 தங்க கழிப்பறைகள்.. அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இத்தனை வசதிகளா? வெளியான அதிர்ச்சி வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c65d8b60-c6b4-448e-bf4b-1b9731abf908/24-6773e516a1e86-sm.webp)
ரூ.56 கோடியில் 12 தங்க கழிப்பறைகள்.. அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இத்தனை வசதிகளா? வெளியான அதிர்ச்சி வீடியோ!
பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் கேஜ்ரிவாலின் விசுவாசியாகக் கருதப்படுகிறார்.இந்த நிலையில் பஞ்சாபில் தற்பொழுது முதல்வராக உள்ள பகவந்த் மான் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படப் போகிறாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
முதல்வர்?
இது குறித்து ஆம் ஆத்மி தோல்விக்குப் பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் மஞ்சிந்தர் சிங் சிர்சா பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் பகவந்த் மானைத் தகுதியற்றவர் என்று கூறி முதல்வர் பதவியிலிருந்து நீக்க முயல்கிறார்கள்.
பஞ்சாபில் அளித்த வாக்குறுதியை கெஜ்ரிவால் நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கூறினார்.மேலும் போதைப் பழக்கத்தைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. பஞ்சாபில் நிலைமை மோசமாகிவிட்டது. இப்போது கெஜ்ரிவால் mla-கள் மூலம் தான் ஒரு நல்ல மனிதர் என்றும், அங்குத் தன்னை முதல்வராக ஆக்க வேண்டும் என்றும் சொல்ல வைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.