நான் அண்ணா மாதிரி இல்லை என் ரூட் கெஜ்ரிவால் போல : நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான்
பேரறிஞர் அண்ணா வேறு. சீமான் வேறு. அண்ணா காலத்தில் கூட்டணி தேவைப்பட்டது . ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அப்படி தேவை இல்லை. அவரை போல நானும் ஜெயிப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல்
வரும் பிபர்வரி 27 ஆம் தேதி ஈரோடு இடைத்தேதல் நடைபெற உள்ளது ,இதில் திமுக , காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பேட்டியிடுகின்றன.
பெண்வேட்பாளர்
இந்த இடைத்தேர்தல் குறித்து செய்தியளார்களிடம் பேசிய சீமான் இடைத்தேர்தலில் தனித்து போட்டி, ஒரு பெண் வேட்பாளரை தேர்வு செய்து களமிறக்குவேன். அது போல பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் கூற முடியாது. பாஜகவுக்கு தமிழகத்தில் பலனில்லை.
அண்ணாமலையின் முதலாளி இங்கு இல்லை. அவர்கள் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான். அவர்கள் கூறும் வேலைய செய்யுற வேலையாள் அண்ணாமலை அவ்வளவு தான் எனக் கூறினார்.
அண்ணா வேறு :
நாங்கள் இப்போதும் தனியாக தான் நிற்போம். பேரறிஞர் அண்ணா வேறு. சீமான் வேறு.
அண்ணா காலத்தில் கூட்டணி தேவைப்பட்டது . ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அப்படி தேவை இல்லை. அவரை போல நானும் வெல்வேன். என்னை குறைத்து மதிப்பிடாதீர்கள் என சீமான் கூறினார்.