25 கோடி வரை பேரம் - MLA'க்களை இழுக்க முயற்சி - பாஜகவின் திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Aam Aadmi Party BJP Delhi Arvind Kejriwal
By Karthick Jan 27, 2024 09:13 AM GMT
Report

 ஆம் ஆத்மீ கட்சி எம்.எல்.ஏ'க்களை இழுக்க பாஜகவினர் முயற்சித்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பதிவு 

இந்த நிலையில் டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று காலை வெளியிட்டுள்ள பதிவில், 

arvind-kejriwal-slams-bjp-in-delhi-mla-issue

 டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஏற்கனவே ஆம்ஆத்மி தலைவர்கள் மீது மதுபான கொள்கை வழக்கை பதிவு செய்து மிரட்டி கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கில் விரைவில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்து விடுவோம் என்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மிரட்டல் விடுக்கும் வகையில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு விடுவார் என்று ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பேசப்பட்டு வருகிறது.

25 கோடி

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு ஆம்ஆத்மி கட்சியை உடைப்போம் என்றும் சொல்கிறார்கள். சமீபத்தில் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் 21 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் ரகசிய பேச்சு நடத்தி உள்ளனர்.

arvind-kejriwal-slams-bjp-in-delhi-mla-issue

அவர்களில் 7 பேரிடம் சமீபத்தில் மீண்டும் தொடர்பு கொண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளனர். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா 25 கோடி ரூபாய் பணம் தருவதாகவும் பேசி இருக்கிறார்கள்.

ஆம்ஆத்மி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு நீங்கள் பாரதிய ஜனதாவுக்கு வாருங்கள். அதே தொகுதியில் நீங்கள் போட்டியிட வாய்ப்பு தருகிறோம் என்றும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க.வினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜ.க. விரித்த வலையில் விழவில்லை. டெல்லியில் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவுடன் ஆம்ஆத்மியை வீழ்த்த முடியாது என்று அவர்களுக்கு தெரியும்.

கனவு ஒருநாளும்....

எனவேதான் இப்படி குறுக்கு வழியில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.25 கோடி தருவதாக பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள்.மதுபான கொள்கை வழக்கில் என்னை கைது செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்கிறார்கள். தேர்தலில் ஆம்ஆத்மியை வீழ்த்த முடியாது என்பதால் மதுபான கொள்கை வழக்கை கையில் எடுத்து இருக்கிறார்கள். என்னை கைது செய்யும் முயற்சி தோல்வி அடைந்ததால் ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள்.

arvind-kejriwal-slams-bjp-in-delhi-mla-issue

கடந்த 4 ஆண்டுகளில் எனக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி எத்தனையோ சதி திட்டங்களை தீட்டி உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றில் கூட அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. டெல்லி மக்களின் ஆதரவும்,கடவுளின் ஆசியும் ஆம்ஆத்மி கட்சிக்கு இருக்கிறது. ஆம்ஆத்மி கட்சியை சேதப்படுத்த முடியாது. ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்.

எனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்களின் கனவு ஒருநாளும் நிறைவேறாது. டெல்லி மக்களுக்கு ஆம்ஆத்மி கட்சி செய்து வரும் நலத்திட்ட பணிகள் நன்றாகவே தெரியும். எவ்வளவு தடைகள் வந்தாலும் ஆம்ஆத்மி மீது டெல்லி மக்கள் வைத்திருக்கும் பாசத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால்தான் தேர்தலில் ஆம்ஆத்மியை வீழ்த்த முடியாத நிலையில் பா.ஜ.க. போராடிக் கொண்டிருக்கிறது.