நீதிமன்றம் ஜாமீன் கொடுத்ததும் சிறைவாசம் - CBI கையில் சிக்கி தவிக்கும் கெஜ்ரிவால்?
டெல்லி மதுக்கொள்கை வழக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.
கைது
தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் ஜாமீன் பெற்று வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி சரண்டர் ஆகினார். கடந்த மார்ச் 21-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளும் அவரின் கட்சிக்கு சாதகமாக அமையவில்லை. அது பெருத்த ஏமாற்றமாகவே இருந்தது. தொடர்ந்து ஜாமீன் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மனுக்களை தாக்கல் செய்து வந்தார் அர்விந்த் கெஜ்ரிவால்.
சிக்கி
அவருக்கு இனிப்பு செய்தி ஒன்றை தந்துள்ளது நீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்,
அரவிந்த் கெஜ்ரிவால் 90 நாட்களாக சிறையில் இருப்பதையும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதும் தெரியும் என சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், கலால் கொள்கை ஊழலில் தொடர்புடைய ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால், முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்து காவலில் இருப்பார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.