என்ன தான் ஆனார்?? தேர்தல் பரபரப்பில் மறக்கப்பட்ட கெஜ்ரிவால்!! நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வெளியான தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மீ கட்சி டெல்லியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
கெஜ்ரிவால் கைது
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பாஜகவிற்கு எதிராக கடுமையான வாதங்களை தொடர்ந்து வைத்து வந்தார். தேர்தல் வாக்குஎடுப்பிற்கு முன்பு கைதானவர், ஜாமீன் பெற்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியில் வந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஆம் ஆத்மீ கட்சி டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மீ கட்சிக்கு பெரும் பின்னடைவேயே கொடுத்துள்ளது.
பஞ்சாப்பில் 13 இடங்களில் 3'ஐ மட்டுமே அக்கட்சி வென்ற நிலையில், டெல்லியில் கூட்டணியாக காங்கிரஸுடன் தேர்தலை சந்தித்து 7 இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு கடந்த 2-ஆம் தேதி ஜாமீன் முடிவடைந்த நிலையில், சிறை சென்றார் கெஜ்ரிவால்.
முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், அந்த பரபரப்பில் அனைவருமே கெஜ்ரிவாலை மறந்து விட்டார்கள். இன்று கெஜ்ரிவ்லா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் அதிரடி
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அமலாக்க இயக்குனரகம் (ED) தாக்கல் செய்த 182 பக்க பதிலைப் பார்க்க மேலும் அவகாசம் தேவைப்படுவதால், கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ஹரிஹரன், நாளைக்கு சிறிது கால அவகாசம் கோரினார்.
இன்று ஜாமீன் விசாரணைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ED இன் பதில் தனக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அட்வான்ஸ் நகலை விசாரணைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு என்னிடம் அளித்ததில் அர்த்தமில்லை என அவர் வாதிட்டார்.
இருப்பினும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, நாளைய விசாரணை நீதிமன்றத்தின் கோடை விடுமுறையை குறைக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு தள்ளிவைக்கப்பட்டால் இரண்டு வாரங்கள் சிறையில் அடைக்கப்படுவார் ஏன் இப்படி காத்திருக்க வேண்டும்?" என கெஜ்ரிவால் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இறுதியில் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து ஜூன் 14 பட்டியலிடப்பட்டது.