பலத்தை நிரூபிக்கிறாரா..? குழப்புகிறதா பாஜக - நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை திடீரென கொண்டு வரும் ஆம் ஆத்மீ

Aam Aadmi Party Delhi Arvind Kejriwal
By Karthick Feb 16, 2024 11:36 AM GMT
Report

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பறித்து அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார்.

டெல்லி விவகாரம்

இன்று (பிப்ரவரி 16) டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

arvind-kejriwal-calls-for-confidence-motion

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை தங்களின் பக்கம் இழுத்து அரசாங்கத்தை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சித்ததாக சமூகவலைத்தளப்பக்கத்தில் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

arvind-kejriwal-calls-for-confidence-motion

"டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வருவேன்" என்று கெஜ்ரிவால் இந்தியில் X தளத்தில் பதிவிட்டுள்ளார். எனினும், இந்த நடவடிக்கைக்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்பிய விவகாரத்தை ஆம் ஆத்மி எழுப்ப வாய்ப்புள்ளது.

25 கோடி வரை பேரம் - MLA'க்களை இழுக்க முயற்சி - பாஜகவின் திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

25 கோடி வரை பேரம் - MLA'க்களை இழுக்க முயற்சி - பாஜகவின் திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

இந்த வழக்கில் விசாரணைக்கு அமலாக்க இயக்குனரகம் கடந்த புதன்கிழமை அவருக்கு ஆறாவது முறையாக சம்மன் அனுப்பியதாக ஆம் ஆத்மீ கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. தற்போது 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது கடந்த 15 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21 ஆம் தேதி பட்ஜெட் கூட்டம் முடிவடையவுள்ளது.