அரசாங்க அதிகாரியாக இருந்து அரசாங்கத்தை நடத்தும் முதலமைச்சராக மாறிய கெஜ்ரிவால்
அரசு அதிகாரியாக இருந்து ஒரு அரங்சாங்கத்தை நடத்தும் முதலமைச்சராக மாறிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்.
பிறப்பு முதல் படிப்பு வரை
ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் கோபிந்த் ராம் கெஜ்ரிவால் - கீதா தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
சிறுவயது முதல் படிப்பின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்த அவர், ஐஐடி தேர்வில் வென்று மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில் சேர்ந்தார்.
இயந்திர பொறியாளராக அவரது கெரியரை தேர்ந்தெடுத்தார்.பட்டப்படிபை முடித்தபின், அவர் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்து சிவில் சர்வீஸ் பணியில் சேரும் முயற்சிகளில் இறங்கினார். இரண்டு மாதம் தெரேசாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.
அன்னா ஹசாரேவுடன் கைகோர்ப்பு
1993 ஆம் ஆண்டு ஐஆர்எஸ்ல் உடன் பணிபுரிந்த சுனிதாவை 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
1999 ஆம் ஆண்டு பரிவர்த்தன் என்ற இயக்கம் மூலம் போலி ரேசன் கார்டு ஊலை அம்பலப்படுத்தினார். மேலும் வருமான வரி, மின்சாரம் மற்றும் உணவு விருந்து தொடர்பான விஷயங்களில் டெல்லி குடிமக்களுக்கு உதவினார்.
பின்னர் சமூக பணிகளில் கவனம் செலுத்துவதற்காக தன் பணியை ராஜினாமா செய்தார். 2006 ஆம் ஆண்டில் பொதுக் கோட்பாடு ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கினார்.
2010 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் தன்னை இணைத்த போது கெஜ்ரிவால் பிரபலமானார்.
அப்போது ஜான் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக பிரச்சாரம் செய்தார். அன்னா ஹசாரேவுடன் இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல்மயமாக்குகிறாரா இல்லையா என்பதை பறறி கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் இருந்து பிரிந்தார்.
டெல்லி முதலமைச்சராக பதவியேற்பு
பின்னர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியல் கட்சியை நிறுவி 2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 70 இடங்களில் 28 இடங்களை வென்றார்.
பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார். 49 நாட்களில் அவர் ஜன் லோக்பால் அமைக்கப்படாததைக் கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றி முதலமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.