44 வயதில் திருமணம் செய்த பிரபல குணச்சித்திர நடிகை - மாப்பிளை யார் தெரியுமா?

Tamil Cinema Marriage Tirumala
By Thahir Mar 22, 2023 05:39 AM GMT
Report

நடிகை லாவண்யா தனது 44 வயதில் தொழில் அதிபர் ஒருவரை திருப்பதியில் திருமணம் செய்துள்ளார்.

சினிமாவில் குணசித்திர நடிகை  

தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் சரத்குமார் நடித்த சூர்யா வம்சம் திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து பிரபலமானார்.

aruvi-serial-actress-lavanya-marriage

பின்னர் விஜயின் பத்ரி , கமல் நடித்த தெனாலி ,ரஜினிகாந்த் நடித்த படையப்பா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தொழிலதிபருடன் திருமணம் 

பல திரைப்படங்களில் நடித்தும் ,அழுத்தமான கதாப்பாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் ,44 வயதான லாவண்யா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் பிரசன்னா என்ற தொழிலதிபரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டுள்ளார் லாவண்யா.

aruvi-serial-actress-lavanya-marriage

'அருவி ' சீரியல் குழுவினர் கலந்து கொண்டுவாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள் ,இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது ,ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றன.