30 வயதுக்கு மேல் கட்டணமின்றி உடல்நல பரிசோதனைகள்
Master Health Checkup in TN Government Hospital: 30 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த உடல்நலப் பரிசோதனைகள் கட்டணமின்றி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.
தமிழகசட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள், தமிழகத்தில் அரசு கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்களில் ’நலம் ஒருங்கிணைந்த இலவச உடல்நலப் பரிசோதனை” திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்மூலம் 30 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கு 14 வகையான உடல்நலப் பரிசோதனைகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil