அண்ணாமலை இயக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ்

K. Annamalai
By Fathima Jun 07, 2026 09:37 AM GMT
Report

பாஜக-வை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள், அதனால் தான் அண்ணாமலை மூலம் இன்னொரு முயற்சி மேற்கொள்கிறார்கள் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிரூபர்களுக்கு பேட்டியளித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் உட்பட பலரும் தவெக-வில் இணைகின்றனர், அனைவரையும் நாங்கள் அரவணைக்கிறோம்.

அண்ணாமலை இயக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் | Arunraj Speaks About Annamalai Party

எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளே அதிமுகவின் தற்போதைய நிலைக்கு காரணம் என தெரிவித்தார்.

மேலும் பாஜக பலமுறை முயற்சி செய்து தமிழ்நாட்டில் தொடர் தோல்வி அடைந்துள்ளது, எனவே தான் அண்ணாமலை மூலமாக இன்னொரு முயற்சி எடுத்துள்ளது.

பாஜக ஓட்டுவங்கியில் உள்ள ஆதரவாளர்களே தற்போது அண்ணாமலை இயக்கத்தில் இணைந்துள்ளனர் என தெரிவித்தார்.

அண்ணாமலை இயக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் | Arunraj Speaks About Annamalai Party